அமேரிக்க பொருளாதார வளர்ச்சியின் 5 தூண்கள் - (20 ஆம் நூற்றண்டுக்கு முன்)



அமெரிக்க இளைஞர்களின் மாறுபட்ட சிந்தனை..............
அமெரிக்கப் பொருளாதார வேகம் .........


இன்று அமெரிக்கா தனிப்பேரும் வல்லரசு நாடாக 14 டிரில்லியன் டாலர் பொருள் உற்பத்திக் குறியீட்டை அடைந்து உலக அரங்கத்தில் தனித்தன்மையுடன் திகழ்கிறது.

அமெரிக்காவின் இந்த உன்னத நிலைக்குக் காரணம் பலப் பல தனி மனிதர்கள். கடந்த நூறு ஆண்டுகளில் அவர்கள் தொலைநோக்குப் பார்வையோடு,அமெரிக்க நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற செயல் வெறியுடன் மாறுபட்டு சிந்தித்து அவர்கள் செய்த பல செயற்கரிய செயல்களும் மற்றும் அதன் விளைவாக அவர்கள் உருவாக்கிய நிறுவனம் அடைந்த அமோக வெற்றியும்தான்.

Be proud to be an Indian.


செயற்கரிய செயல்கள் செய்த மாமனிதர்கள் சிந்தனையின் வெளிப்பாடு மற்றும் வெற்றியே இன்றைய அமெரிக்காவின் உன்னதமான வளர்ச்சி. அத்தகைய சாதாரண மனிதர்கள் அடைந்த அசாதாரண வெற்றியின் விளைவாக அமெரிக்கப் பொருளாதாரம் உலக அளவில் கடந்த நூறு ஆண்டுகளில் மிக விரைவாக முன்னேற்றம் அடைந்தது என்றால் அது மிகையாகாது.

19-ஆம் நூற்றாண்டில் வல்லரசாக விளங்கிய இங்கிலாந்தை பொருளாதார வளர்ச்சியில், அமெரிகா 20-ஆம் நூற்றாண்டில் பின்னுக்கு தள்ளியது. விளைவு, இன்று 21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் , அமெரிக்கா தனிபெரும் 14 டிரில்லியன் டாலர் பொருளாதார வல்லரசாக உருவெடுத்து உள்ளது.



அமெரிக்காவின் மாறுபட்ட சிந்தனை .. சாதனை

இன்று, அமெரிக்க நாடு உலக அளவில் மிகப்பெரிய வல்லரசு நாடாக விளங்குகிறது. இந்த நிகழ்வு ஒரு நாளில் நடைபெறவில்லை.

20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், சில அமெரிக்க இளைஞர்கள் மாறுபட்டு சிந்தித்து, சிந்தனை வழி செயல்களை அமைத்துக் கொண்டு, மிகப் பெரிய அளவில் உலக சாதனை நிகழ்த்தினார்கள். அவர்கள் பின்னாளில், அமெரிக்காவில் பொருளாதார தூண்களாக மாறினார்கள்.
இந்த 5 அமெரிக்க வெற்றி அடைந்த வியாபாரக் கனவுகள் கதைகளில் இருந்து இளைஞன் தெரிந்து கொள்ள பல விசயங்கள் உள்ளன.


உலகை ஆளும் ஐந்து அமெரிக்க நிறுவனங்கள்

1. ஹென்ரி போர்டின் " போர்ட் மோட்டார் "
2. சாம் வால்சனின் " வால் மார்ட்"
3. ரே கிராக்கின் "மெக்டனால்ட்"
4. வால்ட் டிஸ்னியின் "டிஸ்னிலாண்ட்"
5. ஹெவ்லட் மற்றும் பாக்கர்டின் "ஹெஸ் பி"



ஹென்றி போர்டின் கார் கனவு
இன்று, இந்தியாவில் உள்ள 1000 பேரில் 8 பேர் தான் சொந்த கார் வைத்து உள்ளனர். ஆனால், அமெரிக்காவில் உள்ள 1000 பேரில் 500 பேர் சொந்தமாக கார் வைத்து உள்ளனர்.

இதற்குக் காரணம், ஒரு தனிமனிதனின் 106 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்தனைப் பொறி. 1903 -ம் ஆண்டு "ஹென்றி போர்ட்" என்ற இளைஞனின் தொலைநோக்குப் பார்வையில் விளைந்தது தான் "போர்ட் மோட்டார் கம்பெனி"

ஹென்றி போர்ட் சிறிய கார் கம்பெனியை 28,000 அமெரிக்க டாலர் முதலீட்டில் 1903 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். இன்று அந்த போர்ட் மோட்டார் கம்பெனி உலகம் முழுவதும் ஆல்மரமாக வளர்ந்து 2007 ஆம் ஆண்டு 172 பில்லியன் டாலர் அளவுக்குக் கார்களை விற்பனை செய்து உள்ளது.


போர்ட் மோட்டார் கம்பெனியின் பிரம்மாண்ட வளர்ச்சி
இன்று போர்ட் மோட்டார் கம்பெனி, உலகின் 13 வது பெரிய நிறுவனமாக வளர்ச்சி அடைந்து உள்ளது.
2007-2008 ஆம் ஆண்டு கணக்குப்படி போர்ட் மோட்டார் கம்பெனியில் 2,46,000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர், ஆண்டு விற்பனை 172 பில்லியன் அமெரிக்க டாலர்.போர்ட் மோட்டார் கம்பெனியின் வருட வருமானம், ரூபாய் 8,60,000 கோடி . இது இன்றைய இந்திய அரசின் வருடாந்திர பட்ஜெட்டான 10 லட்சம் கோடியை விட கொஞ்சம்தான் குறைவு.

ஆரம்பம், 1903 ஆம் ஆண்டில் ஹென்றி போர்ட் என்ற இளைஞனின் சிந்தனைப் பொறி மற்றும் செயல் வேகத்தில் உருவான நிறுவனம் தான் உலகளாவிய ஹென்றி போர்ட் மோட்டார் கம்பெனி. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.



சாம் வால்சனின் சூப்பர் மார்க்கெட் கனவு

1940 ஆம் ஆண்டு ஜெ.சி. பென்னி என்ற சூப்பர் மார்க்கெட்டில் மாதம் 75 அமெரிக்க டாலர் ஊதியத்திற்கு வேலை செய்து வந்த ஒரு தனிமனிதனால் அமெரிக்காவில் உள்ள ரோஜர் என்ற சிரிய நகரத்தில் 1945 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு சூப்பர் மார்க்கெட்தான், இன்று உலகத்தின் நம்பர் ஒன் சூப்பர் மார்க்கெட்டாக பிரமாண்ட வளர்ச்சி அடைந்து உள்ளது.

அந்த தனிமனிதனின் பெயர், "சாம் வால்சன்" அமெரிக்க நாட்டை சேர்ந்த அவர் ஆரம்பித்த சூப்பர் மார்க்கெட்டின் பெயர் "வால்மார்ட்".

இன்று வால்மார்ட் நிறுவனம் பல உலக நாடுகளில், 6200 கிளைகளுடன் 20,55,000 ஊழியர்களின் ஒத்துழைப்போடு, வெற்றி நடை போடுகிறது.இன்று உலகத்திலேயே அதிக அளவு வியாபாரம் செய்யும் நிறுவனம் இந்த வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்தான. அதிசயம் ! ஆனால் உண்மை.

2008 - ஆம் ஆண்டு, உலகப் புகழ் பெற்ற Fortune 500 தர பட்டியலில் வால்மார்ட் நிறுவனம் உலக அளவில் முதல் இடத்தைப் பிடித்து உள்ளது.


வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்:

உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் 'வால் மார்ட் கடையில் ஒவ்வொரு வாரமும் 13 கோடியே 80 லட்சம் வாடிக்கையாள்ர்கள், பொருட்களை வங்கிக் குவிக்கின்றனர்.

2007 ஆம் ஆண்டு 379 பில்லியன் டாலர் வியாபாரம் செய்யும் மிகப் பெரிய நிறுவனமாக வால்மார்ட் வளர்ச்சி அடைந்து உள்ளது. அதாவது நம்ம ஊர் கணக்குப்படி ரூபாய் 18,95,000 கோடி வியாபாரம் செய்யும் ஆலமரமாக வால்மார்ட் நிறுவனம் வளர்ந்து உள்ளது. அதாவது ரூபாய் 1,89,50,00,00,000. என்ன தலையை சுற்றுகிறதா? சாம் வல்சனின் அன்றைய கனவு, இன்று நனவகியுள்ளது.

ஆரம்பம், 1945 ஆண்டில் சாம் வால்சன் என்ற அமெரிக்க இளைஞனின் சிந்தனைப் பொறி மற்றும் செயல் வேகத்தில் உருவான வால்மார்ட், இன்று உலகின் தலைசிறந்த நிறுவனமாக உருப்பெற்று உள்ளது. முயற்சி திருவினையாக்கும்.

இன்று உலகத்தின் நம்பர் ஒன் துரித சேவை ஹோட்டல், அதாவது, FAST FOOD RESTAURANT எது தெரியுமா ?

அமெரிக்காவைச் சேர்ந்த 'மெக்டனால்ட்' நிறுவனம் தான். அமெரிக்காவைச் சேர்ந்த டிக் மற்றும் மேக் என்ற துரித சேவை ஹோட்டலை கலிஃபோர்னியாவில் 200 சதுர அடி பரப்பில் 1932-ஆம் ஆண்டு நிறுவி நன்றாக நடத்தி வந்தனர்.



மெக்டனால்ட்

1954 - ஆம் ஆண்டில், 'மடல்டி மிக்சர்' என்ற ஒரே நேரத்தில் ஐந்து மில்க் ஷேக்கை தயார் செய்யும் உபகரனத்தை, மெக்டனால்ட் சகோதரர்களிக்கு விற்க வந்தவர்தான் ரே கிராக் என்ற அமெரிக்க இளைஞன். ரே கிராக் தொலைநோக்குப் பார்வையோடு அந்த சிறிய மெக்டனால்ட் துரித சேவை ஹோட்டலைப் பார்த்தார்.

200 சதுர அடி சிறிய கடையில் நன்றாக நடைபெற்ற துரித உணவு சேவை நிறுவனத்தில் உள்ள மிகப் பெரிய வியாபார வாய்ப்பைத் தெயளிவாக ரே கிராக் தொலை நோக்கு சிந்தனையோடு கணித்தார்.

"மல்டி மிக்சர்" தொழிலில் இருந்த ரே கிராக், இந்த மாறுபட்ட துரித உணவகமான மெக்டனால்ட் ஹோட்டல் அமெரிக்கா முழுவதும் தேவை என்பதித் தொலைநோக்குப் பார்வையில் உணர்ந்தார். விளைவு, அந்த மெக்டனால்ட் ஹோட்டலை ரே கிராக் ஆயிரக்கணக்கான போராட்டங்களைச் சந்தித்து 1972 - ஆம் ஆண்டு விலைக்கு வாங்கினார்.

1977 - ஆம் ஆண்டு, அமெரிக்காவில் முதல் பத்து பணக்காரர்களில் ஒரு பணக்காரராகப் பட்டியலில் இடம் பெற்று. ரே கிராக் தன்னுடைய வியாபாரத்தில் வெற்றி அடைந்த சுய சரித்திரத்தை, வெறும் கையில் முழம் போட்டு மகப் பெரிய வெற்றி அடைந்த கதயை காலத்தால் அழியாத ஒரு புத்தகமாக எழுதி இறவாப் புகழ் பெற்றார்.

அன்று ரே கிராக் சிறிய அளவில் ஆரம்பித்த சங்கிலித் தொடர் துரித உணவுக் கடைகள் தான் "மெக்டனால்ட்" நிறுவனம் . இன்று 115 நாடுகளில் 3,90,000 ஊழியர்களியக் கொண்டு,23 பில்லிடன் அமெரிக்க டாலர் அளவுக்கு 2007- ஆம் ஆண்டு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

மெக்டனால்ட் சங்கிலித் தொடர் துரித உணவுகம், நம் ஊர் கணக்குப்படி ரூபாய் 1,15,000 கோடிக்கு பிஸ்சா, பர்கர், ஹாம்பர்கர் மற்றும் மில்க் ஷேக் மட்டும் விற்பனை செய்துள்ளது.


ரே கிராக் கனவு .. நனவு

கனவு -- $14 மில்லியன் நனவு -- 3,90,000 ஊழியர்கள்

1972 -ம் ஆண்டு ரே கிராக் என்ற இளைஞனின் சிந்தனைப் பொறி மற்றும் செயல் வேகம்தான். இன்று உலகம் முழுவதும் உள்ள மேக்டனால்ட் என்ற மிகப்பெரிய துரித உணவு நிறுவனம். வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை இந்த பூமியில் ...! சிந்தி இந்திய இளைஞனே !! தெளிவாக சிந்தி



"வால்ட் டிஸ்னியின்" டிஸ்னி பூமியில் சொர்க்கம் கனவு

நாம் வாழும் இந்த உலகிலேயே அதிசய உலகத்தை, சொர்க்கத்தை உருவாக்க முடியுமா ?

பூமியில் கற்பனை உலகத்தை உருவாக்க முடியுமா ?
முடியும்.. என்று 1942 ம் வருடம் ஒரு தனி மனிதன் குறிப்பாக ஒரு அமெரிக்க இளைஞன் சிந்தித்தான். அதன் விளைவுதான் இன்று உலகம் முழுவதும் வியாபித்து உள்ள "டிஸ்னி லாண்ட்" என்ற பூலோக சொர்க்கம்......

அமெரிக்காவில் 1955 ம் ஆண்டு மிக சிறிய அளவில் ப்ளோரிடா நகரில் ஆரம்பிக்கப்பட்ட "டிஸ்னி லாண்ட்" தான் , உலகத்தில் முதல் முதலாக நிறுவப்பட்ட தீம் பார்க்.




டிஸ்னி லாண்ட்
இன்று உலகம் முழுவதும் உள்ள பல டிஸ்னி லாண்டை, இலட்சக் கணக்கான மக்கள் தினமும் கண்டு களிக்கின்றார்கள்.

வால்ட் டிஸ்னியின் கற்பனைக் குதிரை ஓடிய ஓட்டத்தின் விளைவு "டிஸ்னி லாண்ட்" என்ற நிறுவனம். இன்று டிஸ்னி லாண்ட் சுமார் 36 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கடந்த ஆண்டு டிக்கெட் விற்பனையை எட்டி சாதனை படைத்து உள்ளது.

இந்த நிறுவனம், நம்ம ஊர் கணக்குப்படி ரூபாய் 1,80,000 கோடி அளவுக்கு கடந்த ஆண்டு பண்ம் ஈட்டி , உலக அளவில் மிகப் பெரிய சாதனை படைத்து உள்ளது.

அமெரிக்க வால்ட் டிஸ்னி லாண்ட் நிறுவனத்திற்கு இன்று அமெரிக்காவில் 3 தீம் பார்க்கும், ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்ஸில் ஒரு தீம் பார்க்கும் உள்ளது. இது தவிர, வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு ஜப்பான் நாட்டில் டோக்கியாவில் ஒரு தீம் பார்க்கும், சைனாவில் ஹாங்காங்கில் ஒரு தீம் பார்க்கும் உள்ளது.
ஒரு தனிமனிதனின் தொலைநோக்குப் பார்வையின் விளைவாக நாம் இன்று உலகம் முழுவதும் காண்பது பல தீம் பார்க்குகள். 1985 - ம் ஆண்டு வரை டிஸ்னி லாண்டை 250 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்து உள்ளார்கள்.


வால்ட் டிஸ்னியின் கனவு .. நனவு

கனவு - வால்ட் டிஸ்னியின் கனவு -- $40 மில்லியன்
நனவு - $35 பில்லியன் 1,37,000 ஊழியர்கள்

1942 ம் ஆண்டில் தனி ஒரு மனிதனாகிய வால்ட் டிஸ்னியின் சிந்தனைக் கனவின் வெளிப்பாடுதான் உலகம் முழுவதும் உள்ள பல வால்ட் டிஸ்னி பாதங்கள் நடக்கத் தயாராக இருக்கும் போது பாதைகள் மறுப்பதில்லை



ஹெவ்லட் & பாக்கர்ட் கனவு.

1929-ம் ஆண்டு, ஹெவ்லட், பாக்கர்ட் என்ற இரண்டு இளைஞர்கள், குறிப்பாக ஸ்டான் போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டு இருந்த மாணவர்கள், தங்களுடைய வீட்டின் கார் ஷெட்டில் ஆரம்பித்த மிக சிறிய "ரேடியோ ஆஸிலேகிராப்" நிறுவனம் தான் இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்து உள்ள HP என்ற சுருக்கமாக சொல்லும் , Hewlett & Packard என்ற நிறுவனம்.

கடந்த ஆண்டு ஹெவ்லட் & பாக்கர்ட் நிறுவனம் 104.2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூபாய் 5,21,000 கோடி) அளவுக்கு விற்பனை செய்து 1,72,000 ஊழியர்களுடன் உலகம் முழுவதும் வெற்றி நடை போட்டு பவனி வருகிறது.

கனவு 1929- $ 538 டாலர்

நனவு - 2007- $ 104.2 டாலர்

பில்லியன் --- 1,72,000 ஊழியர்கள்

1929-ம் ஆண்டில், ஹெவ்லட் மற்றும் பாக்கர்ட் என்ற இரண்டு இளைஞர்களின் சிந்தனைப் பொறியின் விளைவுதான் இன்றைய வல்லரசு நிறுவனமான ஹெஸ்பி. வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர் நீச்சல்.

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.