மூளைதனமே மூலதனம் சிறு விளக்க உரை.


சிந்தனை செய் மனமே:


படிப்பவன், சிந்திக்கிறான் !
சிந்திப்பவன், சாதிக்கிறான் ! !
தின்று, திரிந்து உறங்கும் மனமே...
சிந்தனை செய்....


உன் வாழ்க்கை வளமாக சிந்தனை செய்...
இந்தியா வளமாக 37 மடங்கு சிந்தனை செய்...




1.1. வேலை:

இன்று இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிப்பை முடிக்கும் 100 பேரில், 95 பேர் வேலைக்குதான் செல்கிறார்கள். பலருடைய வாழ்க்கை சக்கரம், பள்ளி அல்லது கல்லூரி படிப்பை முடித்தல், வேலைதேடி அலைதல் பிறகு வேலை கிடைத்த உடன், சிறிது காலம் அந்த வேலையில் திருப்தி. பிறகு ஒரு பிரிவினர் வேலை பிடிக்காமல் மாற்று வேலையை தேடுகின்றனர்.




1.2 வேலையில் விரக்தி:

மற்றொரு பிரிவினர், செய்யும் வேலையில் மனம் ஈடுபட்டு திருப்தி அடையாமல், வேலையை சலிப்புடன் தினம் தினம் செய்து மனநிறைவு இல்லாமல் வாழ்கிறார்கள். சுருங்கச் சொன்னால் வேலைக்கு செல்பவர்களில் பலர் விரக்தியுடன் வாழ்ந்து கொண்டு இறுக்கிறார்கள் அல்லதி விரக்தியுடன் வாழ்க்கையை முடிக்கிறார்கள்.






1.3 திறமை.....வாய்ப்பு:

அத்தகைய வேலை விரக்தி மற்றும் வாழ்க்கை விரக்தி மனப்பன்மைக்கு காரணம் தன்னிடம் உள்ள அபரிதமான சக்தியை வெளிக் கொணர்ந்து பல சாதனை செய்ய முடியவில்லையே என்ற எண்ணமும், பிறகு, வாழ்க்கையில் கிடைத்த பல வாய்ப்புகளை பல்வேறு காரணங்களால், குறிப்பாக குடும்ப சூழ்நிலையால் பயன்படுத்த முடியவில்லையே என்ற எண்ண தாக்கம் வேலையில் உள்ள பலருக்கும் வாழ்நாள் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும். இதுதான், வேலைக்கு செல்வோரின் சலிப்பும், விரக்திக்கும் தலையாய காரணம்.






1.4 சுயதொழில்:

மீதம் சமுதாயத்தில் உள்ள 5 சதவீத மக்களில், 4.5 சதவீதம், பேர் தங்களுடைய குடும்ப தொழிலை கவனித்து கொள்ள வேண்டிய பொறுப்பு தானாக அவர்களுக்கு வருகிறது. குடும்ப நிர்பந்தத்தால். அத்தகைய குடும்ப தொழிலை வழி நடத்தி செல்லும் பொறுப்பை ஏற்கின்றார். பிறகு அந்த தொழிலை மன ஈடுபாடு கொண்டு உழைத்து, அந்த தொழிலில் முன்னேற்றம் அடைகின்றனர்.





1.5 தொழில் முனைவோரும் இடர்பாடுகளும்:

இந்த சமுதாயத்தில் மீதம் உள்ள படித்த 0.1 சதவீத மக்கள் தான், புதிய தொழில் தொடங்கி, அந்த தொழிலை திறம்பட நடத்திச் செல்கிறார்கள். நம்மை சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான பொருள்கள், இந்த 0.1 சதவீத மக்களின் சிந்தனை விதையில் விளைந்த ஆலமரங்களே, சிறிய அளவில் குறு தொழிலாக, சிறு தொழிலாக தொடங்கிய பல நிறுவனங்கள் வளர்ந்து மிகப்பெரிய பல்லாயிரக்கணக்கான கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனங்களாக உருப்பெற்று உள்ளன.

1.6 தேசத்தின் உயிர் நாடி:

தொழில் முனைவோர்தான் ஒரு தேசத்தின் உயிர் நாடி, ஒரு தேச முன்னேற்றத்தில் மிகப்பெரிய பங்கு ஆற்றுபவர்: இந்தியா நேற்று ஒரு வளரும் நாடு. இந்தியா இன்று ஒரு வளரும் நாடு. இந்தியா நாளை ஒரு வளர்ந்த நாடு. நாளை என்றால் 2020 ஆம் ஆண்டிலா?, 2030ஆம் ஆண்டிலா?, 2040ஆம் ஆண்டிலா?, 2030ஆம் ஆண்டிலா?, 2040 ஆம் ஆண்டிலா?, 2050ஆம் ஆண்டிலா?, அல்லது 2015 ஆம் ஆண்டிலா?. இத்தகைய இந்திய பொருளாதார வளர்ச்சி யாருடைய கையில் உள்ளது?.






1.7 இளைஞர்களின் கையில் எதிர்கால இந்தியா:

இன்றைய இந்திய இளைஞனுடைய கையில் தான் எதிர்கால இந்தியா உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவீத மக்கள் இளைஞர்கள் ஆம், இவர்கள் கையில் தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது. குறிப்பாக சொல்லப்போனால், இன்று, வியாபார கனவு கண்டு தொழில் தொடங்கி, அதை தினமும் உரிய வகையில் பராமரித்து ஆலமரமாக மாற்ற தொலைநோக்கு திட்டம் கொண்ட இளைஞர்கள் கையில் தான் உள்ளது.

1.8 சிறிய செயல்......பெரிய வெற்றி....

சிறிய சிறிய முன்னேற்றங்கள், சிறிய, சிறிய மனிதர்களால் சிறிய, சிறிய அளவில். இந்திய திருநாட்டில் மூலை முடுக்கு எல்லாம் சிறிய, சிறிய அளவில் நடைபெறும் போது, அது மிகப்பெரிய சமுதாய மாற்றம், சமுதாய மறுமலர்ச்சியை ஏறப்படுத்தும்.

1.9 ஆசை...திறமை...

இந்த தமிழ்நாட்டில் உள்ள 6.5 கோடி மக்களில், புதிதாக ஒரு சில ஆயிரம் இளைஞர்களுக்குத்தான் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.




1.10 ஆசை...திறமை...வியாபாரம்....வெற்றி....

இந்த தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணகான், இளைஞர், இளைஞிகளுக்கு பல்வகை தொழில் பற்றிய சந்தேகம் இருக்கும். "தூக்கத்தில் பாதி, ஏக்கத்தில் பாதி" எண்பது போல், தொழில் முனைவோராக் வேண்டும், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ரஏக்கத்தில் பாதி, வாழ்க்கை சென்று விடுகிறது. அத்தகைய முற்போக்கு சிந்தனையோடு செயல்படும் போது அதில் சந்திக்கும் இடர்பாடுகள் அடுத்த பாதி வாழ்க்கை சென்று விடுகிறது. பலர் இந்த நிலை தாண்டி அடுத்து என்ன செய்யலாம் என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

1.11. அனுபவம்:

என்னுடைய 17 ஆண்டுகால தொழில் முனைவோர் ஆலோசனையின், போது ஆயிரக்கணக்கான, தொழில் முனைவோரை சந்திக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் பல வெற்றி அடைந்த வியாபாரக் கனவுகள் சிலர் தோல்வி அடைந்த வியாபாரக் கனவுகள்.





1.12 தொழில் முனைவோர் கையேடு:

அந்த அரிய தொழில் முனைவோர் அனுபவங்களை பலருக்கும் பயனுள்ள வகையில் ஒரு தொழில் கையேடாக ஏன் வெளியிடக்கூடாது என்ற எண்ணம் என் மனதில் உதித்தது. அதன் வெளிப்பாடுதான், தங்கள் கையில் உள்ள "மூளைதனமே மூலதனம்" வாருங்கள் தொழில் தொடங்க!' எனற புத்தகம்.

1.13 அனுபவம்......அனுபோகம்......

அனுபவம்.....Experience.....என்பதி வாழ்க்கையில் அடிபட்டவுடன் கிடைக்கும் பட்ட அறிவு.

அனுபோகம்...Expertise.....என்பது அடுத்தவர்கள் வாழ்க்கையில் அடிபட்டதில் இருந்து தான் வாழ்க்கையில் அடிபடாமல் இருக்க ஒருவருக்கு கிடைக்கும் படாத அறிவு.

1.14 அறிவாளி:

அறிவாளி....அடுத்தவனிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறான். சமுதாயத்தில் உள்ள பலரின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்து அவ்ர்களின் வெற்றி மற்றும் தோல்விக்காண காரணத்தை இனம் கண்டு கொண்டு, வெற்றிகரமான வாழ்க்கைப் பாதையை தெளிவாக தேர்ந்து எடுத்து, பயணம் செய்து விடா பிடியாக குறிக்கோளை நோக்கி முன்னேறி வெற்றி அடைபவர்கள்.


1.15 முட்டாள்:

முட்டாள்... தானே வாழ்நாள் முழுவதும் பலப் பல தவறுகளை செய்து, அதன் மூலம் கடைசி காலத்தில் சிந்தனை தெளிவாகப் பெறுவர்.

1.16 அனுபவ புத்தகம்:

இந்த புத்தகத்தில், நால் கடந்த 17 ஆண்டுகால மேலாண்மை மற்றும் தொழில் ஆலோசகராக பணியாற்றிய பல்வேறு நிறுவனத்தில் இருந்து பெற்ற அரிய அனுபவம் மற்றும் சொந்த அனுபவ அறிவை படிக்கும் ஒவ்வொருவருக்கும் படாத அறிவு பெற வேண்டும் என்ற ஆவலில் மனம் திறந்து பகிர்ந்து கொண்டு உள்ளேன்.



இந்தியா 2009.............1 மடங்கு வளர்ச்சி:

கடந்த 100 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரத்தில் நாம் கண்டு உள்ள வியக்கத்தகு முன்னேற்றம் 1டிரில்லின் டாலர் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சிக் காரணம்.

1....ஒரு டாடா
1---ஒரு பிர்லா
1----ஒரு விஸ்வேஸ்வரய்யா
1---ஒரு அம்பானி
1---ஒரு நாராயணமூர்த்தி
1---அசிம் பிரேம்ஜி





இந்தியா 2009.............1 மடங்கு வளர்ச்சி:

2050-ஆம் ஆண்டு வல்லரசு இந்தியா அடைய இருக்கும் 37 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைய, உருவாக்க அதிக பட்சமாக




37....புதிய டாடாக்கள் தேவை
37----புதிய பிர்லாக்கள் தேவை
37----புதிய விஸ்வேஸ்வரய்யாக்கள் தேவை
37----புதிய அம்பானிகள் தேவை
37----புதிய நாராயணமூர்த்திகள் தேவை
37----புதிய அசிம் பிரேம்ஜிகள் தேவை


அவர்கள் அங்கே இப்போது இருக்கிறார்கள் ?.
சிந்தனை செய் மனமே ! 37 மடங்கு சிந்தனை செய் மனமே !!
நீங்கள் தான் அவர்கள். மூளைதனமே மூலதனம் !



1.1 சிந்தனை தொகுப்பு:

இந்த உலகம் தோன்றிய நாள் முதல் 1970 ஆம் ஆண்டு வரை மனிதன் இந்த உலகத்தில் உருவாக்கிய சிந்தனை தொகுப்பும் (Information Base), கடந்த 38 ஆண்டுகால மனிதர்கள் உருவாக்கிய சிந்தனை தொகுப்பும் சரிசமம். சுருங்கச்சொன்னால் இலட்சோப இலட்ச வருட மனித சிந்தனையும் கடந்த 38 கால மனித சிந்தனை வளர்ச்சிக்கு சமம்.

1,00,000 வருடம் = 38 வருடம்

படிப்பவன், சிந்திக்கிறான்.
சிந்திப்பவன், சாதிக்கிறான்.


படிப்பவன், இன்றைய வேகமாக மாறுகின்ற, உலகத்தின், மாற்றத்தை உன்னிப்பாக் கவனிக்கிறான். படிப்பவன், சிந்திக்கிறான். குறிப்பாக மாறுபட்டு சிந்திக்கிறான்.

தனி ஒரு மனிதனின், மாறுபட்டு சிந்தனையில் ஒரு தொழில் ஆர்வம் மற்றும் தொழில் கனவு பிறக்கிறது. பிறகு சிந்தனையோடு கூடிய கடின உழைப்பால், செய்யும் தொழிலே தெய்வம் என்ற மனப்பான்மையோடு ஒருவன் தொழிலில் ஈடுபடும் போது தொழில் பக்தி வருகிறது. தொழில் பக்தி, முழுமன ஈடுபாட்டுடன் ஒருவனுக்கு தொழில் தருகிறது.

புதிது புதிதாக எதையாவது தொழில் செய்து போட்டியாளர்களை விட நல்ல முறையில் தரமான பொருளை, தரமான விலையில் தர ஆர்வம் பிறக்கிறது.

அதற்க்கான தீவிர முயற்சியில் தொழில் முனைவோர் இறங்குகிறார்கள். அந்த எண்ணத்திலேயே தன்னுடைய ஒவ்வொரு கனத்தையும் செலவழிக்கிறார்கள். இரவு பகல் பாராமல் உழைக்கின்றனர். அத்தகைய ஒரு முக உழைப்புக்கு (Concentrated Effort) கிடைக்கும் வெகுமதிதான் தொழிலில் ஒருவர் அடையும் வெற்றி....புகழ்...பெரும் பணம்.


தொழில் வெற்றி:

இன்றைய உலகில் தொழில் வெற்றி பெற அடிப்படை தேவைகள் என்ன ?
தினம், தினம் உலகம் மாறுபட்டு கொண்டே இருக்கிறது, நேற்று இருந்த உலகம்...இன்று இல்லை.
இன்று உள்ள உலகம்....நாளை இருக்காது.
நாளை உள்ள உலகம்...நாளை மறுநாள் கட்டாயம் இருக்காது.
இந்த உலகம் மிக வேகமாக மாறிக்கொண்டே இருக்கிறது.



தொழில் வாய்ப்பு:

தினம், தினம் மாறுகின்ற உலகத்தில், மாற்றத்தினால் எற்படும் சமுதாய மாற்றததை கூர்ந்து கவனித்து, தொலை நோக்கு பார்வை
கொண்டு எதிர்காலத்தை கணித்து, தன்னம்பிக்கையோடு செயல்பட்டு, எதிர்காலத்தை தன்வயப்படுத்திக் கவனித்து, புரிந்து கொள்பவன் புத்திசாலி அல்லது தொழில் முனைவோர்.




தொழில் வெற்றி இரகசியம்:

சமுதாயத்தை மாறுபட்ட பார்வையில் பார்த்து, புரிந்து கொண்ட பல்வேறு விஷயங்களை மிக விரைவில் கிரகித்து கொண்டு பிறகு, அதை வியாபாரத்தில் மற்றும் சொந்த வாழ்க்கையில் பயனுள்ளதாக, மிக விரைவில், மாற்றிக் கொள்வதில்தான் ஒருவருடைய தொழில் வெற்றி இரகசியம் அடங்கி உள்ளது.








அம்பானியின் தொழில் வெற்றி:

இன்றைய உலக பணக்காரர்கள் தர வரிசையில் முதல் பத்து நபர்களில் இருவர் இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி, அனில் அம்பானி சகோதரர்கள். இவர்களின் இன்றைய வெற்றிக்குப் பின்னால் அவர்களுடைய தந்தை திருபாய் அம்பானி 1960ஆம் ஆண்டுகளில் போட்ட சிந்தனை விதையையும், தீர்க்க தரிசனமான் தொழில் திட்டத்தையும் நாம் இன்று பார்க்க முடிகிறது.


பள்ளி ஆசிரியர் மகன்:

சாதாரண பள்ளி ஆசிரியரின் மகனாக பிறந்த திருபாய் அம்பானி கடந்த நாற்பத்து எட்டு ஆண்டுகளில், ரூபாய் 15,000 முதலீட்டை ஒரு இலட்சம் கோடி வணிகம் செய்யும் அளவிற்க்கு உலக நிறுவனமாக மாற்றி காண்பித்து இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு இட்டுச் சென்றுள்ளார் என்றால் அது மிகையாகாது. திருபாய் அம்பானியின் தொழில் வெற்றிக்கு பின்னால் உள்ளது ஒரு மாறுபட்ட எண்ணமே, வெறும் அதிர்ஷ்டம் மற்றும் அல்ல !.


ஜவுளித்துறையில் சாதாரணக் கண்ணோட்டம்:

ஜவுளித்துறை மிக பழமையான் துறை, அந்த துறையில், பல பெரிய பெரிய நிறுவனங்கள் ஆண்டாண்டு காலமாக வர்த்தகம் செய்து
வந்தன. அவர்கள் எல்லாம், காட்டன் ஜவுளியில் மட்டும் கவனம் செலுத்தினர். காரணம், இந்தியா என்று வலிமையாக நம்பினர். இந்திய தட்ப வெப்ப சூழ்நிலைக்கு எற்றது காட்டன் ஆடை மட்டுமே என்று பெரிய ஜவுளி நிறுவனங்கள் நம்பினர். அதன் விளைவு, அவர்களின் எண்ண ஓட்டம், இந்தியாவில் "நேற்று காட்டன், இன்று காட்டன், நாளை காட்டன்".


அம்பானியின் ஜவுளித்துறை அசாதாரணக் கண்ணோட்டம்:

திருபாய் அம்பானி மாறுபட்டு சிந்தித்தார், உலகம் முழுவதும் காட்டன் ஜவுளியாக இருந்தது. பாலிஸ்டர் கண்டுபிடித்தவுடன், பல நாடுகளில் பாலியஸ்டர் காட்டனை விழுங்கி விட்டது. அதேபோல் இந்தியாவிலேயும் கட்டாயம் நடக்கும், அது காலத்தின் கட்டாயம் என்று முழுமையாக நம்பினார். அதன் விளைவு, அம்பானியின் சிந்தனையில் மாற்றம் "நேற்று காட்டன், இன்று காட்டன், நாளை பாலியஸ்டர்".



காட்டன்.....பாலியஸ்டர்....

இன்று இந்தியாவில் உள்ள 114 கோடிக்கும் மேலானவர்களில் ஒரு சதவீதம் கூட காட்டன் துணியை அணிவது இல்லை. எல்லோரும் பாலியஸ்டருக்கு மாறிவிட்டனர்.







கனவு....நனவு....

இன்று இந்தியாவில் உலகதரமான் பாலியஸ்டர் துணியை நாம் எல்லோரும் உடுத்துகிறோம் என்றால், அது திருபாய் அம்பானியின் 48 ஆண்டுகளுக்கு முன்னால் உருவான மாறுபட்ட சிந்தனைக்கு வெற்றிதான் என்று பொருள்.





அம்பானியின் வெற்றி இரகசியம்:

இன்று நாம் காணும் பிரம்மாண்ட, லட்சக்கணக்கான கோடி வர்த்தகம் செய்யும் ரிலையன்ஸ் சாம்ராஜ்யத்திற்க்கு பின்னால் உள்ளது திருபாய் அம்பானியின் தாரக மந்திரம்...

1. பிரமாண்டமாக சிந்தியுங்கள் (Think Big)
2. வேகமாக சிந்தியுங்கள் (Think Fast)
3. வேகமாக செயல்படுங்கள் ( Act Fast)
4. வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி, போட்டியாளர்கள் வாய்பு உள்ளது என்று சிந்திக்கும்முன் வெற்றி கனியை அடைந்து விடுங்கள்.(Grab the opportunity, before others could smell that there exit an opportunity)


ஒரு முனைப்பு:

வெற்றி அடைய துடிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும், இக்கணத் தேவை, முதலில் ஒரு முனைப்பு. இன்றைய உலகில், புதிய புதிய பொருட்களுக்கு பின்னால் உள்ளது. பல்வேறு நிறுவனம் மற்றும் அதில் உள்ள தனி மனிதனின் மாறுபட்ட எண்ணம் தான் என்ற உண்மையை சற்று சிந்தித்தால் ஒவ்வொருவருக்கும் புரியும்.

மன தைரியம்:

இன்றைய சமுதாய சூழலில், பல வியாபார வாய்ப்புகள் உள்ளன. இருந்தும் தொழில் முனைவோர் ஆகப்போகிறேன் என்று சொல்வதற்கே பெரிய ஊக்கம் மற்றும் மன தைரியம் வேண்டும்.


வாழ்க்கையில் ரிஸ்க் எடு:

மேலும் சொல்லப் போனால் சொந்தக் காலில் நிற்க போகிறேன், வியாபாரம் செய்து முன்னேற்ப் போகிறேன் என்று சொல்வதற்க்கே
இளைஞர்களுக்கு ஒரு மனதைரியம் அல்லது "தில்" வேண்டும். உண்மை நிலை என்னவென்றால் இந்த உலகத்தில் உள்ள நூறு பேரில், ஒருவருக்கு கூட அந்த "தில்" இல்லை.



ஆயிரத்தில் ஒருவன்:

ஆயிரத்தில் ஒருவனுக்குதான் அத்தகைய சொந்தக்காலில் நிற்கமுடியும் என்ற தன்னம்பிக்கை, மன தைரியம் வருகிறது. அத்தகைய தில் உள்ள இளைகஞர்கள் தன்னம்பிகையை மூலதனமாக வைத்து சரியான தொழிலை தேர்ந்து எடுக்கின்றனர். அந்த தொழிலை தன்னுடைய உயிர் மூச்சாக மாற்றிக் கொண்டு, தினம் தினம் பல பரிமாணங்களில் சிந்தித்து, புதிய, புதிய யுக்திகளை கையாண்டு. சந்தை வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக் கொண்டு சந்தையை பிடிக்கின்றனர். ஆம் மூளைதனமே....மூலதனம் !.



தொழில் மூனைவோரின் தடுமாற்றங்கள்:

குறு தொழில் மற்றும் சிறு தொழில் முனைவோர்க்கு முன்னால் உள்ள மிக முக்கிய நான்கு தடுமாற்றங்கள்:

1. ஏன் தொழில் முனைவோராக மாறவேண்டும் ?.
2. எந்த வயதில் தொழில் ஆரம்பிக்கலாம் ?.
3. என்ன தொழில் ஆரம்பிக்கலாம் ?.
4. எப்படி தொழில் ஆரம்பிக்கலாம் ?.

இந்த முக்கிய நான்கு கேள்விகளுக்கு தெளிவான பதில் கிடைக்காமல் பலர் தடுமாற்றம் கண்டு திறமை இருந்தும், முன்னேற்ற வாய்ப்புகள் பல இருந்தும், வாழ்நாள் முழுதும் வேலையில் செலவு செய்து, பிறருக்கு உழைத்தே தன் வாழ்நாள் முழுவதுதையும் முடித்து விடுகின்றனர்.

ஒரு அறிஞர் சொல்கிறார் "பெற்றோர் பல பிறவி, பிறருக்கு உழைத்தே ஏழையானேன்". தன்னுடைய திறமை என்ன ?. என்னுடைய தனித்தன்மை என்பதை உணராமல் தன்னுடைய தனித்துவ எண்ணத்தை வலுப்படுத்திக் கொள்ளாமல் , பிறருடைய எண்ணத்துக்கு மதிப்பு கொடுத்து ஏழயானேன். ஆம், நம்மில் பலர் பூந்தொட்டியில் ஆலமரத்தை வாழ்நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.


ஏன் தொழில் ?.

இந்த நான்கு கேள்விகளில், முதல் கேள்வியான ஏன் தொழில் முனைவோரக மாற வேண்டும்? என்ற கேள்விக்கு தெளிவான விடை கிடைக்காமல், சமுதாயத்தில் 50 சதவீத மக்கள் வாழ்க்கையில் பெரும் பொழுதை அளவில்லா திறமை இருந்தும் பிறருக்காக அல்லது பல்வேறு நிறுவனங்களுக்காக வேலை செய்து வாழ்நாள் முழுவதுதயும் கழித்து விடுகின்றனர்.

எந்த வயதில் தொழில் ?.

30-ஆம் வயதில் ஆரம்பிக்கலாம், 40-ஆம் வயதில் ஆரம்பிக்கலாம், 50-ஆம் வயதில் ஆரம்பிக்கலாம், 60-ஆம் வயதில் ஆரம்பிக்கலாம் என்று தள்ளிப்போட்டு, வாழ்வின் கடைசி வரை தொழில் ஆரம்பிக்காதவர்களை இரண்டாவது வகைப் படுத்தலாம். இத்தகைய மக்கள் சமுதாயத்தில் உள்ள மற்றொரு 45% மக்கள்.


என்ன தொழில் ஆரம்பிக்கலாம் ?.

வாழ நினைத்தால் வாழலாம்,
வழியா இல்லை பூமியில் !

முன்னேற நினைத்தால்,
முன்னேற வழியா இல்லை இந்த பூமியில் !

தொழில் செய்ய நினைத்தால் செய்யலாம்,
தொழிலா இல்லை இந்த பூமியில் !


நேற்றைய உலகத்தில் வெற்றி பெற பணம் மிக முக்கியம். ஆனால், இன்றைய உலகில், உலக அளவில் வெற்றி பெற பணத்தை விட மாறுபட்ட எண்ணமே மிக அவசியம்.

20 - ஆம் நூற்றாண்டில் பணம் இருந்தால் ஒருவனுக்கு வெற்றி,
21 - ஆம் நூற்றாண்டில், தனித்துவ எண்ணம் அல்லது தனித்துவ ஐடியா, இருந்தால் தொழில் வெற்றி நிச்சயம்.



எப்படி தொழில் ஆரம்பிக்கலாம் ?.
ஐடியா இருந்தால், பணம் வரும் சரியான தொலைநோக்கு ஐடியா இருந்தால், பணம் தானாக வரும். இன்றைய உலகில் பொருள் வறுமை என்று ஒன்று கிடையாது !. இன்றைய உலகில் ஒரே ஒரு வறுமை தான், அது "அறிவு வறுமை".

"ஆளும் வளரனும், அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி" ஆனால், நம்மில் பலர், உடலை வளர்க்கிறோம், ஆனால் அறிவை வ்ளர்ப்பது கிடையாது !.

வாய்ப்புகள், குறிப்பாக தொழில் வாய்ப்புகள், நம்மைச் சுற்றி சிதறிக் கிடக்கிறது. அவற்றை நம்மில் பலர் பார்க்க மறுக்கிறோம், ஏற்க மறுக்கிறோம்.

இந்த உலகில், பத்து இலட்சம் பேர் அதிகமாக சம்பாதிக்க எண்ணுகிறார்கள். அவர்களில் ஆயிரம் பேர் செயலில் இறங்குகிறார்கள். அவர்களில் நூறு பேர் மனதில் நினைத்ததை சாதித்து, தொழில் தொடங்குகிறார்கள். அவர்கள் 1000 நாளில், பத்து பேர் வெற்றி பெறுகிறார்கள். அவர்களில் ஒருவர் உலக புகழ் அடைகிறார்கள்.செயலில் இறங்குகிறார்கள்.

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.