உடல் நலம் .... உள்ள நலம்.

பரிபூர்ண ஆரோக்கியம்........


இன்றைய நவீன யுகத்தில், நூறில் ஒருவர் அல்லது இருவருக்கு மட்டுமே இந்த் பரிபூர்ண ஆரோக்கியம் மற்றும் இனிமையான வாழ்வு கிட்டுகிறது.

அதன் விளைவாக, அவர்கள் மட்டும் பூரணமான வாழ்க்கை நடத்துகிறார்கள். மற்றவர்கள், இனிமையான வழ்வு வாழ வேண்டும் இஎன்ற நினைவில், எண்ணப் போராட்டத்திலேயே வாழ்க்கையைத் தொலைக்கின்றனர்.

நிலையில்லா உடலில், உயிர் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித சாதி.........


உடல் நலம்.....உள்ள நலம்.........


இன்றைய, சமுதாய சூழ்நிலையில், கம்ப்யூட்டர், தொலைக்காட்சிப் பெட்டி, ஏசி, பிரிட்ஜ், மைக்ரோவேவ் ஓவன், பைக், கார், விமானம், செல் போன் என்ற வசதி வாய்ப்புகள் நாளுக்கு நாள் நம்மிடையே அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால், தனி மனிதனின் உடல் நலம் மன (உள்ள) நலம் மற்றும் ஆன்ம (உயிர்) நலம் அதே வேகத்தில் அதிகரிது கொண்டே போகிறதா? என்றால், தெளிவான பதில், இல்லை என்பதுதான்.

நிலையில்லா உடலில், உயிர் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித சாதி.............


அறிவு வறுமை:

இன்று பெருநகரங்கள் மற்றும் குறு நகரங்களிக் பெருகிவரும் பல்நோக்கு, பல அடுக்கு மாடி மருத்துவ மனைகள், 24 மணி நேர மருந்துக் கடைகள் மற்றும் சிடி ஸ்கேன் கலாஸ்சாரம் படித்ட மற்றும் பாமர மனிதனின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்து காட்டுகிறது.

இத்தகைய ஆரோக்கியமற்ற வளர்ச்சி தனி மனிதனின் அறியாமையும், உடல் பற்றிய அலட்சியப் போக்கையும் ஆன்ம அறிவு வறுமையும் உலகறியச் செய்கிறது.

காயமே இது போய்யடா, வெறும் காற்று அடைத்த பையடா !


நோய்கள் காரணம்............


பிளாரன்ஸ் நைட்டிங் கேல், என்ற மிகப்பெரிய சமூக சேவகி, 150 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மருத்துவ மனையை ஆரம்பித்து வைக்கும் போது சொன்ன கருத்தை நினைவு கூறுவோம்.

'நோயைக் குணப்படுத்தும் மருத்துவ மனைகளைக் திறப்பதால் மட்டும் ஒரு சமூகம் சமுதாய வளர்ச்சி மற்றும் விஞ்ஞான வளர்ச்சி அடைந்தது ஆகாது. நோய் உண்டாவதற்கான காரணத்தை அறிந்து, சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் தக்க விழிப்புணர்ச்சி பெற்று, நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வதே, சரியான விஞ்ஞான வளர்ச்சி மற்றும் சமுதாய வளர்ச்சி', என்று கூறினார்.


விஞ்ஞான முன்னேற்றம்.....


விஞ்ஞான முன்னேற்றம் அடையாத காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களிடம் இருந்த உடல் ஆரோக்கியம், மன (உள்ள) ஆரோக்கியம், மற்றும் ஆன்ம (உயிர்) ஆரோக்கியம் இன்று நம்மிடம் இந்த 21-ஆம் நூற்றாண்டில் மருத்துவ வசதிகள் பெருகிவிட்ட, அதி நவீன சிகிச்சைகள் பெருகிவிட்ட இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் உள்ளதா? என்றால் யதார்த்தமான உண்மை இல்லை என்பது தான்.


மெய்பொருள் முன்னேற்றம்....


இன்றைய விஞ்ஞான உலகில்....

உடல் ஆரோக்கியத்தை எங்கே தொலைத்தோம்.
மன (உள்ள) ஆரோக்கியத்தை எப்படித் தொலைத்தோம் ?
ஆன்ம (உயிர்) ஆரோக்கியத்தை ஏன் தொலைத்தோம் ?

ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானே கேட்டு தற்சோதனை செய்து சிந்திக்க வேண்டிய கேள்விகள்.

இன்று விஞ்ஞானம் வெகுவாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது. ஆனால், மனிதன் மெய்ஞானம் பின்னேறிக் கொண்டு இருக்கிறது.

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.