பரிபூரண வாழ்க்கை

24 நிமிட நேர நிரிவாகமே 24 மணி நேர நிரிவாகம்:

22 வருடம் - 8 மணி நேரம் - -தூக்கம்
2.75 வருடம் - 1 மணி நேரம் --காலைக்கடன் மற்றும் குளியல்
2.75 வருடம் -- 1 மணி நேரம் -- 3 வேளை உணவு
2.75 வருடம் -- 1 மணி நேரம் -- பயணத்திற்க்கு
22 வருடம் -- 8 மணி நேரம் -- வேலை
8.25 வருடம் -- 3 மணி நேரம் - குடும்ப நேரம்,
3.13 வருடம் --- 1 மணி 36 வருடம் - தொலைக் காட்சி நேரம்.

நில் ! கவனி !! 24 நிமிடத்தை ஒவ்வொரு நாளும் சரியான முறையில் நிர்வாகி !!

வாழ்க்கை

வாழ்க்கை என்றால் என்ன?

வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைத்து வாழ்வது வாழ்க்கை இல்லை ! இப்படித்தான் வாழவேண்டும் என்று அறுதியிட்டு நேரத்தை சரியாக நிரிவாகம் செய்து ஆக்க வழியில் அறிவை செலுத்தி வாழ்வதுதான் வாழ்க்கை.

திட்டமிடாமல் வாழ்வது என்பது வாழ்க்கை அல்ல. திட்டமிட்டு குறிப்பாக நேரத்தைத் திட்டமிட்டு, திட்டமிட்டபடி வாழ்வதுதான் உன்னதமான வாழ்க்கை.

பரிபூரண வாழ்க்கை


நாம் இந்த பூமியில் வாழ்வது ஒரு முறை. அந்த வாழ்க்கையை சாதாரண வகையில் அமைத்துக் கொள்வதா ? அல்லது பரிபூரண் அசாதாரண நிலையில் அமைத்துக் கொள்வதா ?

பரிபூரண வாழ்க்கைதான் (Holistic Life) ஒவ்வொரு தனிமனிதனும் அனுபவிக்க வேண்டிய உயரிய நிலை. அது தான் உயரிய அசாதாரண வாழ்க்கை.

பரிபூரண வாழ்க்கை வாழ நினைக்கும் ஒரு தனிமனிதன் வாழ்க்கையை, குறிப்பக தினம் தினம் வெவ்வேறு செயல்களுக்கு செலவு செய்யும் நேரத்தி திட்டமிட்டு பயன் உள்ள் செயல்களை சமன் செய்ய முற்பட வேண்டும்.

பரிபூரண வாழ்க்கை

ஒரு நாள் வாழ்க்கையை ஒரு மனிதன் எந்த எந்த செயல்களுக்கு செலவு செய்ய வேண்டும் ?

தனி ஒரு மனிதன் தனக்குக் கிடைக்கும் உன்னதமான ஒரு நாளை, ஆறு வகைகளில் செலவு செய்யலாம்.

அந்த ஆறு வகைகள்:

1. பணத்தை மேம்படுத்த.........
2. குடும்பத்தை மேம்படுத்த.........
3. உடலை மேம்படுத்த.........
4. மனதை மேம்படுத்த.........
5. ஆன்ம பலத்தை மேம்படுத்த.........
6. சமுதாயத்தை மேம்படுத்த.........

வாழ்கை மேம்பாடு

ஆனால், நம்மில் அதிகமானோர் ஒரு நாளை இரண்டு அல்லது மூன்று வகைகளில் மட்டும் தான் செலவு செய்கிறோம்.

அந்த முன்று வகைகள்...
1 . பணத்தை மேம்படுத்த...
2 . குடும்பத்தை மேம்படுத்த...
3 . சார்ந்துள்ள நிறுவனத்தின் மூலம் சமுதாயத்தை மேம்படுத்த...

விளைவு, முறையற்ற வாழ்க்கை மற்றும் தெளிவற்ற வாழ்க்கை. மேலும், அசாதாரண மனிதன், சாதாரண மனிதனாக வாழ்ந்து, மடிகிறான்.

சிந்தனை செய் மனமே!

முறையற்ற வாழ்க்கையை மாற்றியமைத்து எப்படி முரண்படுத்துவது?
பிறகு முரன்படுத்தப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு சமன் செய்து வாழ்வது?

உடலை மேம்படுத்த

நாம் ஒரே ஒரு முறைதான் இந்த உலகில் வாழ்கிறோம். அந்த அறிய வாழ்க்கையின் அருமையைப் புரிந்து கொண்டு வாழ்க்கையை உயரிய நோக்கத்திற்காக ஒவ்வொருவரும் வாழ முற்படவேண்டும்.

தினமும் ஒவ்வொரு மணித்துளியும், நம்மை நாமே நான் யார்? என்னுடைய திறமைகள் என்ன? இந்தத் திறமைகளை என் முன்னேற்றம் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு எந்த வகையில் செலவு செய்ய வேண்டும்? என்று கேட்டுக் கொண்டு, நம் வாழ்க்கை முறையை சீரமைத்து ஒழங்கு படுத்திக் கொள்ள கேட்க வேண்டிய கேள்வி...

நாம் வாழ்வின் நோக்கம் அறிந்து சரியான, முரண்பாடற்ற வாழ்க்கையை வாழ்கின்றோமா? இல்லை. நம்மில் அதிகமானவருக்கு உடலை மேம்படுத்த நேரமில்லை.

பலருக்கு தினமும் மனதை மேம்படுத்த நேரம் இல்லை.. குறிப்பாக, மேலும் பலருக்கு தினமும் உடலையும் மற்றும் மனதையும் மேம்படுத்த நேரம் இல்லை.
தினமும் உடற்பயிற்சிக்கு 24 நிமிடம் மற்றும் மனப்பயிற்சிக்கு 24 நிமிடம் என்று செலவு செய்பவர்கள் வாழ்க்கையை தினம் தினம் முழுமையான ஆரோக்கியத்துடன் முழமையான இனிமையுடன் அனுபவிக்கலாம்.

தினமும் கலையில் எழுந்த்வுடம், மனப்பயிற்சி என்றால் தியானம் மட்டும் அல்ல, நல்ல சிந்தனையைத் தூண்டும் புத்தகங்களைத் தேர்ந்து எடுத்து அதில் சில அல்லது பல அத்தியாயத்தைப் படித்து மனதை வளப்படுத்திக் கொள்ளலாம். இதைத்தான் நம் முன்னோர்கள் ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.

ஆன்மபலத்தை மேம்படுத்த

முழு ஆரோக்கியம் என்றால் என்ன?
...உடல் ஆரோக்கியம்... மன ஆரோக்கியம் மற்றும்
...ஆன்மா (உயிர்) ஆரோக்கியம்.
சுருங்கச் சொன்னால்,
"நோயற்ற வாழ்க்கையே ஆரோக்கியமான வாழ்க்கை".
இனிமையான ஆரோக்கியமான வாழ்க்கை என்பது உடல், மனம் மற்றும் ஆன்ம ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று ஒத்து, இயங்கி ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மனிதனுக்குக் கிடைக்கும் ஒரு வரப்பிரசாதம்.
இன்றைய நவநாகரிக இளைஞயர்களுக்கு, ஆன்ம பலத்தை மேம்படுத்த நேரம் இல்லை. குறிப்பாக, உடலையும், மனதையும், மற்றும் ஆன்ம பலத்தையும் மேம்படுத்த நேரம் இல்லை.

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.