சமச்சீர் வாழ்க்கை

24 மணி நேர வாழ்க்கை

ஒரு நாள் மனித வாழ்க்கை என்பது 24 மணிநேரத்தைக் கொண்டது. இந்த வாழ்க்கையை காற்று அடைந்த ஒரு பலுனோடு ஒப்பிடலாம்.
இதைத்தான் நம் முன்னோர்கள்...
"காயமே இது பொய்யடா...
வெறும் காற்றடைத்தப் பையட"
"வெங்காயம் சுக்கானால், வெந்தயத்தால்
ஆவதென்ன?"
என்று பல வகையில் விளக்கியுள்ளார்.
ஒரு தனிமனிதனின் நேரம் ஒரு நாளில், 3 பெரிய வகைகளில் செலவு ஆகிறது. அவைகள்...
1 . வேலை நேரம்
2 .குடும்ப நேரம்
3 . தனிமனித நேரம்

சமச்சீர் வாழ்க்கை

இந்த உலகில் உள்ள அனைவருக்கும் இயற்கை அன்னையால் கொடுக்கப்பட்ட உயரிய, சமமான சொத்து, நேரம் மட்டும் தான். சுருங்கச் சொன்னால் ஒரு நாளில் நமக்குக் கிடைக்கும் 24 மணி நேரம்தான் நம்முடைய மிகப்பெரிய மனித சொத்து.

அந்த உன்னதமான 24 மணி நேரத்தை வேலைக்கு 8 மணி நேரம், குடும்பத்திற்கு 8 மணி நேரம் மற்றும் தனிமனிதனுக்கு 8 மணி நேரம் என்ற 3 வகையில் முறைப்படுத்திக் கொண்டு, சமன் செய்து வாழ்வதுதான் ஆரோக்கிய வாழ்க்கை முறை!!

சமச்சீர் வாழ்க்கை வாழ நினைப்பது மற்றும் திட்டமிடுவது மிகவும் எளிது. ஆனால் திட்டமிட்டபடி சமச்சீர் வாழ்க்கை வாழ்வது மிகவும் கடினம். சமச்சீர் வாழ்க்கை வாழ முதல்படி மன நிர்வாகம். அதைத்தான் மனநிர்வகமே நேர நிர்வாகம் என்று தெளிவாகச் சொல்கிறோம். குறிப்பாக, ஒரு நாளில் 24 நிமிட நேர நிர்வாகமே, 24 மணி நேர சமச்சீர் வாழ்க்கை நிர்வாகம்.

ஆரோக்கிய சமச்சீர் வாழ்க்கை:

சமச்சீர் வாழ்க்கை:

சமச்சீர் வாழ்க்கை வாழ நினைப்பது மற்றும் திட்டமிடுவது மிகவும் எளிது. ஆனால் திட்டமிட்டபடி சமச்சீர் வாழ்க்கை வாழ்வது மகவும் கடினம். சமச்சீர் வாழ்க்கை வாழ முதல் படி மன நிர்வாகம். அதைத்தான் மனநிரிவாகமே நேர நிரிவாகம் என்று தெளிவாகச் சொல்கிறோம். குறிப்பாக, ஒரு நாளில் 24 நிமிட நேர நிரிவாகமே, 24 மணி நேர சமச்சீர் வாழ்க்கை நிர்வாகம்.

நேரப் போராட்டம்:

* ஒரு நாளில், நாம் வேலைக்கு செலவு செய்யும் நேரத்தை ' < ' என்ற குறியீட்டால் குறிப்போம்.
* ஒரு நாளில், நாம் வேலைக்கு செலவு செய்யும் நேரத்தை ' > ' என்ற குறியீட்டால் குறிப்போம்.
* ஒரு நாளில், நாம் தனிமனித ஆரோக்கியத்திற்க்கு செலவு செய்யும் தனிமனித நேரத்தை ' ^ ' என்ற குறியீட்டால் குறிப்போம்.

ஒரு மனிதன் ஆரோக்கிய சமச்சீர் வாழ்க்கை வாழ்ந்தால் மூன்று கோணங்களும் (<, >, ^) சேர்ந்து சமமான் முக்கோண் நாளை, பரிபூரண நாளை உருவாக்கும்.

ஆரோக்கிய சமச்சீர் வாழ்க்கை:

ஆரோக்கிய வாழ்க்கை என்பது எப்படியும் வாழலாம் என்று ஒருவர் வாழ்ந்தால் கிடைக்காது. மாறாக, இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒருவர் வாழ்க்கையை முறைப்படுத்தி, வாழ்க்கையை வரையறைப்படுத்தி, அதன்படி, தினம், தினம் வாழ்வதால் கிடைப்பது.

ஆரோக்கிய சமச்சீர் வாழ்க்கை என்பது தனி மனிதன் ஒரு நாளில் 8 மணி நேரம் தனிமனித செயல்களுக்கும், 8 மணி நேரம் குடும்ப செயல்களுக்கும் மற்றும் மீதமுள்ள 8 மணி நேரம் பொருள் ஈட்டும் வேலைகளுக்கும் என்று ஒரு நாளைத் திட்டமிட்டு, பிறகு நேர விழிப்புணர்வோடு செலவு செய்ய வேண்டும்.

ஆரோக்கியமற்ற சமன் இல்லாத வாழ்க்கை:

நம்மில் அதிகமானோர் சமச்சீராக நேரத்தை செலவு செய்யாமல், ஒரு நாளில் தொழிலுக்கு மற்றும் அலுவலக வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதிக நேரம் செலவு செய்கின்றோம். விளைவு, 9 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை வேலை ம்ற்றும் வேலைக்குச் செல்லும் பயண நேரத்திற்க்கு செலவு செய்யும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை இன்று சமுதாயத்தில் நிலவுகிறது.

ஆரோக்கியமற்ற சமன் இல்லாத குடும்ப வாழ்க்கை:

இன்றைய விஞ்ஞான உலகில் மனிதன் பணம், பணம் என்று பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள அலைகிறான். விளைவு, ஒரு நாளில் தனிமனிதனின் வாழ்க்கையில், 9 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை வேலை மற்றும் தொழிலுக்கே சென்றுவிடுகிறது. தனிமனிதன், குடும்பத்திற்க்காக மற்றும் தனிமனித ஆரோக்கியத்திற்க்கு செலவி செய்யும் நேரம் ஒரு நாளிக் மகவும் சுருங்கிவிட்டது.

"குடும்ப நேரம்" என்பது வீட்டில் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சிபெட்டி முன் செலவு செய்யும் நேரம் இல்லை. நல்லதொரு குடும்பம்தான் பல்கலைக கழகம். குடும்ப மக்களை நல்ல குணநலன்கள் கொண்ட குடிமக்களாக நல்ல வழியில் உருவாக்கி நாட்டிற்க்கும், வீட்டிற்க்கும் பெருமை சேர்க்கும் உதவும் நேரம்.

"குடும்ப நேரம்" என்பது அத்தகைய நல்லதொரு இனிமையான பல்கலைக் கழகத்தை உருவாக்க முயலும் ஆக்கப்பூர்வமான நேரம்.

ஆரோக்கியமற்ற சமன் இல்லாத தனிமனித வாழ்க்கை:

அதைவிட, பரிதாபம் என்னவென்றால் தனி ஒரு மனிதன், தன்னைப் பற்றி சிந்திக்கும் நேரமான 'தனிமனித நேரம்" ஒரு நாளில் மிக மிக சுருங்கிவிட்டது.

நீ உன்னை அறிந்தால்.....நீ உன் 24 மணி நேரத்தின் அருமையை உணர்ந்தால்...நீ உன் 24 நிமிட நேரத்தின் உட்பொருளை உணர்ந்தால்...இந்த உலகத்தில் கடைசி வரைப் போராடலாம்....உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் நீ தலைவணங்காமல் வாழலாம்.......

உடல், மன, ஆன்ம ஆரோக்கியம்

மன நிர்வாகமே .....
உடல் ஆரோக்கிய நேர நிர்வாகம்.

மன நிர்வாகமே.....
மன ஆரோக்கிய நேர நிர்வாகம் .

மன நிர்வாகமே.....
ஆன்ம ஆரோக்கிய நேர நிர்வாகம் .

மன நிர்வாகமே.....
நேர நிர்வாகம்

நேர நிர்வாகமே.....
வாழ்க்கை நிர்வாகம்

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.