இந்திய இளைஞர்களின் தொலைநோக்கு பார்வை.


வெற்றிக் கோட்பாடு
உலகில் லட்சம் மனிதர்கள் தினம், தினம் பெரும் செல்வந்தராக வேண்டும், மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அவர்களில், ஆயிரம் மனிதர்கள் செவந்தர் ஆவது எப்படி என்ற சிந்தனையோடு நின்றுவிடாமல், அத்தகைய சிந்தனையில் தெளிவு பெற்று மற்றவர்களிடம் அந்த சிந்தனையைப் பற்றி பேசுகிறார்கள்.

அத்தகைய ஆயிரம் பேரில், நூறு மனிதர்கள் செல்வந்தராகும் முயற்சியில் சப்தம் இல்லாமல் சிந்தனை தெளிவுப்படி புதிய தொழில் திட்டத்தை வடிவு அமைக்கின்றனர். பிறகு தொழிலில் இறங்கி செயல்படுகிறார்கள்.

அத்தகைய 100 மனிதர்களில், பத்து மனிதர்கள், ஐந்து அல்லது ஆறு மனிதர்கள் தொழில் ஆரம்பித்த மூன்று வருடங்களில் அல்லது 1000 நாட்களில், ஆரம்பித்த தொழிலில் தோல்வி அடைந்து, அந்த தொழிலில் காணாமல் போய்விடுகிறார்கள்.

மீதம் உள்ள ஐந்து அல்லது நான்கு மனிதர்களில், ஒருவர் அல்லத் இருவர் மட்டுமே தொழிலில் ஐந்து மற்றும் பத்து வருடங்களுக்கு மேல் நிலைத்து நின்று உலக அளவில் புகழ் பெற்ற தொழில் நிறுவனங்களை உருவாக்குகிறார்கள்.

சுருக்கமாகஸ் சொன்னால் .. தெளிவாக சொன்னால்.. இந்த உலகில் லட்சத்தில் ஒருவருக்கு மட்டும்தான் மகத்தான வெற்றி கிடைக்கிறது.

அந்த ஒரு மகத்தான வெற்றி இளைஞர்களுக்கான தகுதிகள் மற்றும் குணாதிசயங்கள்தான் என்ன? சற்று சிந்திப்போம் !

இலட்சோப இலட்ச எண்ணங்களில், ஒரே ஒரு எண்ணத்தை வாழ்வின் இலட்சியமாக மாற்றி, அந்த இலட்சியத்தை மனதில் நிறுத்தி, தடைகல்லைப் படிகல்லாக மாற்றி, சோதனைகளை சாதனைகளாக மாற்றிய இளைஞர்களால் தான் அத்தகைய வெற்றியை அடைய முடியும்.



வெற்றி

வெற்றி எனபது .......... "ஒரு தோல்வியில் இருந்து மற்றொரு தோல்விக்கு சென்று, அதிலும் மனம் தளராமல், வெற்றி இலக்கு ஒன்றையே உயிர் மூச்சாக கொண்டு வாழும் மனிதனை வெற்றி முத்தமிடும் ."

தோல்வி இளைஞனின் நேரத்தை பாதிக்கலாம்.................
தோல்வியால் காலவிரயம் ஆகலாம்.......
தோல்விகள் உறவுகளைப் பாதிக்கலாம்.........
தோல்விகள் குடும்பத்தைப் பாதிக்கலாம்...........

தோல்விகள் தனிமனிதனின் நிலையை, பணத்தை பாதிக்கலாம்....

ஆனால் தோல்வி ஒரு இளைஞனின் தன்னம்பிக்கையை பாதிக்கக் கூடாது.
தோல்வி இளைஞனின் சிந்தனை மற்றும் சாதனை வேகத்தைப் பாதிக்கக் கூடாது.


பார்வை....தொலைநோக்குப் பார்வை:

சமீபத்தில் ஒரு கார் நிறுவனம், அவர்களின் விளம்பரத்தில் "Look Beyond" என்று ஒரு கருப்புக் கண்ணாடி படத்தைப் போட்டு விளம்பரம் செய்து இருந்தார்கள்.

முதலில் பார்த்த போது, ஒரு கருப்பு கண்ணாடியில், சில வட்டங்கள் தென்பட்டன.

அந்த சில வட்டங்கள் என்ன? என்று கூர்ந்து கவனித்த போது....

கண்களுக்கு 'கருப்புக் கண்ணாடி' மற்றும் 'ரேடார்' தென்பட்டது.



தொலைநோக்குப் பார்வைக்கு....ரேடார்...கிட்ட பார்வைக்குக் கருப்பு கண்ணாடி...

தொலைதூரப் பார்வைக் கொண்ட மனிதர்களின் பார்வைக்கு இந்தப் படம் ஒரு "ரேடார்". அது என்ன ரேடார்? போர் முனையில் எதிரி விமானம் 500 கிலோ மீட்டர் தொலைவில் வரும்போதே கண்டுபிடித்துவிடும் தொழில்னுட்பம் கொண்ட ஒரு கருவியின் பெயர் ரேடார்.

அதே வேளையில், கிட்ட பார்வை கொண்ட மனிதர்களின் பார்வைக்கு, அந்தப் படம் ஒரு "கருப்புக் கண்ணாடி".

படம் ஒன்றுதான், ஆனால் பார்ப்ப்வர்களின் மனநிலை மற்றும் கண்ணோட்டத்தைப் பொறுத்து பொருள் ரேடாராக, கருப்புக் கண்ணாடியாக மாறுபடுகிறது.



இளைஞர்களின் கிட்டப்பார்வை

இன்றைய இந்தியாவின் மக்கள் தொகை 114 கோடி, இந்த 114 கோடி மக்களில், 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் பங்கு 57 கோடி.

அத்தகைய 57 கோடி இந்திய இளைஞர்களில், தொலைநோக்குப் பார்வை கொண்ட இளைஞர்கள் அதிக பட்சமாக 1 கோடி பேர் இருக்கலாம்.

மற்ற 56 கோடி இந்திய இளைஞர்கள் கிட்டப் பார்வை கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இத்தகைய கிட்டப் பார்வை இளைஞர்கள், அதிக பட்சமாக, ஒரு நாள் அல்லது ஒரு வாரத்திற்குத் திட்டமிட்டு வேலை செய்து வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.

இந்தியாவில் தொலைநோக்குப் பார்வை கொண்ட இளைஞர்கள் 1 கோடி.
கிட்டப்பார்வை கொண்ட இளைஞர்கள் 56 கோடி



இளைஞர்களின் தொலைநோக்குப் பார்வை

தொலைநோக்கு சிந்தனையுடைய 1 கோடி இந்திய இளைஞர்களில், அடுத்த 41 ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்கும் என்று தெளிவாகக் கனவு காணக்கூடிய இளைஞர்கள் மிக சிலரே.

அதிலும் 2050 ஆம் ஆண்டுகளில், இந்தியா அடைய உள்ள அபரிதமான வளர்ச்சியும் மற்றும் அதில் உள்ள வாய்ப்புகளைப் பற்றி தெளிவாக அகக் கண்ணில் தெளிவாக பார்ப்பவர்கள், அதிகபட்சமாக 2 லட்சம் இளைஞர்கள் இருப்பார்கள்.

தொலைநோக்குப் பார்வை கொண்ட இந்திய இளைஞர்கள் 1 கோடி.



நூறு ஆண்டுகால தொலைநோக்குப் பார்வை:

அத்தகைய இரண்டு லட்சம் இளைஞர்களில், எதிர்காலக்கனவை நனவாக்க தினம், தினம் உழைக்கும் உன்னதமான இலட்சிய இந்தைய இளைஞர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 1 லட்சம் இருக்கலாம்.

அடுத்த நூறு ஆண்டுகளில், அதாவது 2109-ம் ஆண்டில், இந்தியத் திருநாடு எப்படி இருக்கும்? எந்தந்த வகையில் பரிமாண வளர்ச்சி அடையும் என்ற தொலைநோக்குப் பார்வை ந்ம்ம்மில் எத்தனை இளைஞர்களுக்கு உள்ளது?.

தொலைநோக்கு சிந்தனை கொண்ட மனிதர்கள் : 1 கோடி

தொலைநோக்குச் செயல் கொண்ட மனிதர்கள் : 20 கோடி

தொலைநோக்கு சிந்தனையோடு கூடிய செயல் கொண்ட மனிதர்கள் : 1 லட்சம் பேர்.

உண்மையில், இந்தியாவிலேயே அதிகபட்சமாக 5 முதல் 10 பேருக்கு அடுத்த 100 ஆண்டுகால இந்திய தொலைநோக்குப் பார்வை இருக்கலாம்.
அதாவது இன்றைய இந்திய இளைஞர்களில் 57 கோடி பேரில், விரல்விட்டு எண்ணக் கூடிய இளைஞர்கர்களுக்குத் தான் அத்தகைய தெளிவான தொலைநோக்குப் பார்வை இருக்கும்.

மற்ற இளைஞர்கள் எல்லாம், இந்த உலகமயமாக்கப்பட்ட, வேகமான உலகில் கிட்டப்பார்வையோடு வாழ்கிறார்கள்.



41 ஆண்டுகால தொலைநோக்குப் பார்வை

அவ்வளவு ஏன், குறிப்பாக அடுத்த 41 ஆண்டுகளில், அதாவது 2050-ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் எந்த நிலையில் இருக்கும் என்ற தெளிவு நம்மில் எத்தனை பேருக்கு உள்ளது ?

அடுத்த 41 ஆண்டுகளில், அதாவது 2050-ம் ஆண்டில் என்ன புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் இந்தியாவில் இருக்கும் ?
அவ்வாறு நாளை இந்தியாவைத் தேடி வரும் வாய்ப்புகளை இன்றே இனம் கண்டு கொண்டு, தன்னை அத்தகைய வாய்ப்புகளுக்கு எப்படி பண்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு இந்திய இளைஞனும் சிந்திக்க வேண்டும்.

Be Global Buy Global.


இன்றைய ஒவ்வொரு இளைஞனும் தொலைநோக்குப் பார்வையோடு அத்தகைய இந்திய பொருளாதார வளர்ச்சியைத் தெளிவாக அகக் கண்ணில் பார்க்க வேண்டும்.

பிறகு, அத்தகைய அபரிதமான கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளுக்கு இன்றே தன்னை எவ்வாறு தயார் செய்து கொள்ள வேண்டும்? என்று ஒவ்வொரு இளைஞனும் சிந்திக்க வேண்டும்.
இத்தகைய பல கேள்விகளுக்கு நம்மில் எத்தனை பேருக்கு தொலைநோக்குப் பார்வையோடு கூடிய தெளிவான விடை உள்ளது.

உலக நிலப்பரப்பில் இந்தியாவின் பங்கு 4 சதவீதம்தான். ஆனால் மக்கள் தொகையில் 15 சதவீதத்திற்கு மேல்...

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.