இந்திய இளைஞனுக்கு முத்தான உறுதிமொழிகள்

உறுதி மொழி -1
" நான் ஒரு இந்தியன். இந்தியனாக பிறந்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் ".


உறுதி மொழி -2
" நான் ஒரு இந்திய அறிவு ஜீவி. என்னிடம் 5000 வருட பாரம்பரிய தொடர் அனுபவம் மற்றும் சக்தி மூளையில் தொகுப்பாக உள்ளதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் ".


உறுதி மொழி -3
" நான் இன்று செய்ய இருக்கும் சாதாரண செயல்களில் , மாறுபட்ட சிந்தனைகளை கொண்டு, அசாதாரண செயல்களை செய்ய முற்படுவேன். அதன் மூலம் , இந்திய திருநாட்டின் வளர்ச்சிக்கும் மற்றும் உலக மறுமலர்ச்சிக்கும் ஒரு கருவியாக மற்றும் கிரியா ஊக்கியாக இருப்பேன்."


விழித்தெழு இந்தியா... விழித்தெழு .....
"விழித்தெழு இந்தியா... விழித்தெழு வேளை வந்துவிட்டது. வேலைக்கு போவதற்கல்ல.. மற்றவர்கள் உனக்காக வேலை செய்யும்படியாய் செய்வதற்கு பொறியியல் பட்டம் இருக்கிறது என்பதாலேயே நீ பொறியாளர் ஆக வேண்டிய அவசியமில்லையே. எது உன் சிறப்பம்சம் என்று எண்ணுகிறாயோ அதை செய். அப்போதுதான் நீ எதை எண்ணுகிறாயோ அதில் சிறந்து விளங்குவாய்.


சொந்தமாக தொழில் தொடங்கு
சொந்தமாக எதையாவது தொடங்கு. அப்போதுதான் உன்னை யாரும் வேலையை விட்டு நீக்க மாட்டார்கள். வெறும் பத்தாயிரம் ரூபாயில் கூடத் தொடங்கு. அதற்கு மேல் உனக்கு தேவையில்லை. பரிந்துரைகளோ, அரசியல்வாதிகளோ, காவல்துறையோ உனக்கு தேவையில்லை. உனக்குத் தேவையெல்லாம் நீதான். இந்தப் பத்தாயிரம் ,பல கோடிகளாக வளரும்.இது நிஜம். உன்னால் இது முடியும்.


இந்திய விவசாயம் முன்னேற..
" வரப்பு உயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும்.
நெல் உயர மணி உயரும். மணி உயர குடி உயரும்.
குடி உயர கோல் உயரும். கோல் உயர கோன் உயர்வான்."
மாறுபட்ட விவசாய உக்தியை பெருக்கி இரண்டாம் பசுமை புரட்சிக்கு தயார் ஆவோம்.


தொழிலாளி .. தொழிற்சாலை உற்பத்தி

கடவுள் என்னும் முதலாளி .. கண்டெடுத்த தொழிலாளி...
தொழிலாளியின் உடல் உழைப்பு, அறிவு உழைப்பு உயர உயர தொழிற்சாலை உற்பத்தி உயரும். தொழிற்சாலை உற்பத்தி உயர உயர தொழிற்சாலை உற்பத்தி செய்யும் பொருட்களின் விலை குறையும். தரம் உயரும்.


தொழிலாளி .. உழைப்போம் உயர்வோம்..

தொழிற்சாலைப் பொருட்களின் விலை குறைந்து தரம் உயர .. உயர .. தொழிற்சாலையின் தரமான பொருள் உற்பத்தி , பொருள் மதிப்பு வாடிக்கையாளர்களிடம் உயரும். தொழிற்சாலையின் தரமான பொருள் உற்பத்தி , பொருள் மதிப்பு வாடிக்கையாளர்களிடம் உயர உயர தொழிற்சாலை இலாபம் உயரும்.

தொழிற்சாலையின் இலாபம் உயர உயர தொழிலாளியின் வருமானம், வாழ்க்கை முறை உயரும்.


தொழிலாளி .. உழைப்போம் உயர்வோம்..

தொழிலாளியின் வருமானம், வாழ்க்கை முறை உயர உயர.. சமூகத்தில் மக்களின் பொருள் வாங்கும் சக்தி உயரும்.
மக்களின் பொருள் வாங்கும் சக்தி உயர உயர, நாட்டில் பொருட்களின் தேவை அதிகரிக்கும். உற்பத்தி நாட்டில் உயரும்.
இதனால் மேலும் பல புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகும். பழைய தொழில் நிறுவனங்கள் மேலும் வளரும்.


சிந்தனையோடு உழைப்போம்... உயர்வோம்..
பல தொழில் நிறுவனங்கள் நாட்டில் வளர வளர .. மேலும் பல இலட்சகணக்கான இலட்சிய இந்தியனுக்கு வேலை கிடைக்கும்.
வெளிநாட்டிற்கு தரமான இந்திய பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய , மேலும் பல இந்திய தொழில் நிறுவனங்கள் அபரிமித வளர்ச்சி பெறும்.
உள்நாடு மற்றும் வெளிநாடு ஏற்றுமதி மூலம் இந்திய நாடு வேகமான வளர்ச்சி பாதையில் சென்று வல்லரசு நாடாக உருப்பெறும்.


இளைஞனே .. உயரிய எண்ணமே... உயரிய செயலே.. உன் வாழ்க்கை.. உன் நாட்டின் வளர்ச்சி..
" உலகமெல்லாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்.
உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்.
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்.
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும் " - யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.