இந்தியப் பொருளாதாரம்...

எண்ணத் தூய்மை ... வினைத்தூய்மை...

"எண்ணம், பேச்சு, செயல் மூன்றிலும் மாணவர்கள் பரிசுத்தமானவர்களாக விளங்க வேண்டும். இல்லை என்றால் எவ்வளவுதான் படித்திருந்தாலும் அதனால் பயன் இல்லை - மகாத்மா காந்தி



உலகப் பொருளாதார வளர்ச்சி வேகம்

உலகம் முழுவதும் உற்பத்தி வருடத்திற்கு வருடம் குறைந்தபட்சம் 4 டிரில்லியன் டாலர் (ரூபாய் 200 லட்சம் கோடி) அதிகரித்துக் கொண்டே போகிறது.
இந்த வேகத்தில் சென்றால் 2020-ல் ஆண்டு உலக உற்பத்தி 80 டிரில்லியன் டாலர் (ரூபாய் 4000 லட்சம் கோடி) என்ற நிலையை அடையும். 2050-ல் ஆண்டு உலக உற்பத்தி 220 டிரில்லியன் டாலர் (ரூபாய் 11,000 லட்சம் கோடி) என்ற உற்பத்தி நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியப் பொருளாதாரம் 2007----------

உலகப் பொருளாதாரம் : 52 டிரில்லியன் டாலர்

இந்தியப் பொருளாதாரம் : 1 டிரில்லியன் டாலர்

2007-ம் ஆண்டுகளில் உலகப் பொருளாதாரம் 52 டிரில்லியன் என்ற நிலையில் இருந்தது. இதில், இந்தியாவின் பங்கு 1 டிரில்லியன் என்ற அளவில் மிக மிகக் குறைவாகத்தான் இருந்து உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் 52-ல் ஒரு பங்குதான் இந்தியாவைன் பங்களிப்பாக இருந்தது.


இந்தியப் பொருளாதாரம் 2050........

அடுத்த 42 ஆண்டுகளில் குரைந்த பட்சம் 28 டிரில்லியன் டாலர், அதிக பட்சமாக 37 டிரில்லியன் டாலர் அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் மிக வேகமான வளர்ச்சி அடையும் என்று உலகத் தொழில் நுட்ப வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

தற்போது உள்ள 52-ல் ஒரு பங்கு என்ற நிலை வெகு வேகமாக மாறி, 2050- ஆம் ஆண்டு இந்தியாவின் பங்கு 6-ல் ஒரு பங்கு என்ற மிக உன்னதமான நிலைக்கு இந்தியா வளர வாய்ப்பு உள்ளது.


இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி

1985 -- 200 பில்லியன் டாலர்

1995 -- 400 பில்லியன் டாலர்

2004 -- 700 பில்லியன் டாலர்

2005 -- 800 பில்லியன் டாலர்

2007 -- 1 டிரில்லியன் டாலர்



1 டிரில்லியன் இந்தியா ...

2007-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் , 25-ம் தேதி இந்தியப் பொருளாதார வரலாற்றில் ஒரு பொன்னான நாள்.

இந்தியப் பொருளாதார உற்பத்திக் குறியீடு 1 டிரில்லியன் டாலரை அடைந்த மகத்தான நாள்.

ஒவ்வொரு வருடம் ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26-ம் தேதியை சுதந்திர மற்றும் குடியரசு தினமாகக் கொண்டாடுவதைப் போல், ஏப்ரல் 25-ஆம் தேதியை பொருளாதார வல்லரசு நாளாகக் கொண்டாடுவோம்.


இந்தியப் பொருளாதாரம் நேற்று

2007--------- 1 டிரில்லியன் டாலர்

2007-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ம் தேதி இந்தியப் பொருளாதார உற்பத்திக் குறியீடு 1 டிரில்லியன் டாலரை அடைந்தது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 59 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்களில், பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து, இந்த ஒரு டிரில்லியன் டாலர் என்ற உயரிய நிலையை அடைந்து உள்ளது.


இந்தியப் பொருளாதாரம் நாளை

2014 - 2 டிரில்லியன் டாலர்

2007-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ம் தேதி இந்தியப் பொருளாதார உற்பத்திக் குறியீடு 1 டிரில்லியன் டாலரை அடைந்தது.
இந்த நிலை , 2014-ம் ஆண்டில் 2 டிரில்லியன் டாலர்(ரூபாய் 100 லட்சம் கோடி) என்ற பொருளாதார வளர்ச்சி நிலையை அடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இந்தியப் பொருளாதாரம் நாளை

2019 - 3 டிரில்லியன் டாலர்
2007-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ம் தேதி இந்தியப் பொருளாதார உற்பத்திக் குறியீடு 1 டிரில்லியன் டாலரை அடைந்தது.

இந்த நிலை , 2019-ம் ஆண்டில் 3 டிரில்லியன் டாலர்(ரூபாய் 150 லட்சம் கோடி) என்ற பொருளாதார வளர்ச்சி நிலையை அடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இந்தியப் பொருளாதாரம் நாளை

2022 - 4 டிரில்லியன் டாலர்
2007-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ம் தேதி இந்தியப் பொருளாதார உற்பத்திக் குறியீடு 1 டிரில்லியன் டாலரை அடைந்தது.

இந்த நிலை , 2022 -ம் ஆண்டில் 4 டிரில்லியன் டாலர்(ரூபாய் 200 லட்சம் கோடி) என்ற பொருளாதார வளர்ச்சி நிலையை அடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இந்தியப் பொருளாதாரம் நாளை

2025 - 5 டிரில்லியன் டாலர்
2007-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ம் தேதி இந்தியப் பொருளாதார உற்பத்திக் குறியீடு 1 டிரில்லியன் டாலரை அடைந்தது.

இந்த நிலை , 2025 -ம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர்(ரூபாய் 250 லட்சம் கோடி) என்ற பொருளாதார வளர்ச்சி நிலையை அடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி

2014 -- 2 டிரில்லியன் டாலர்

2019 -- 3 டிரில்லியன் டாலர்

2022 -- 4 டிரில்லியன் டாலர்

2025 -- 5 டிரில்லியன் டாலர்

2050 -- 28/37 டிரில்லியன் டாலர்


இந்தியப் பொருளாதாரம் நாளை

2050 - 28 டிரில்லியன் டாலர்
2007-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ம் தேதி இந்தியப் பொருளாதார உற்பத்திக் குறியீடு 1 டிரில்லியன் டாலரை அடைந்தது.

இந்த நிலை , 2050 -ம் ஆண்டில் குறைந்த பட்சமாக 28 டிரில்லியன் டாலர்(ரூபாய் 1400 லட்சம் கோடி) என்ற பொருளாதார வளர்ச்சி நிலையை அடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.அதிகபட்சமாக 37 டிரில்லியன் டாலர்(ரூபாய் 1850 லட்சம் கோடி) என்ற பொருளாதார வளர்ச்சி நிலையை அடையும்.

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.